Tuesday, July 3, 2012

இலங்கையைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கு கனேடிய அரசாங்கம் புகலிடம் வழங்க மறுத்துள்ளது!

Tuesday, July 03, 2012
இலங்கையைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கு கனேடிய அரசாங்கம்புகலிடம் வழங்க மறுத்துள்ளது.

நடராஜா குருபரன் என்ற கடற்படை கமாண்டரே இவ்வாறு கனடாவில் புகலிடம்கோரியுள்ளார். குறித்த கடற்படை அதிகாரி யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகலிடம் வழங்க முடியாது என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருபரன் மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் இவ்வாறு புகலிடம்கோரியுள்ளனர். இலங்கைக் கடற்படையில் கடமையாற்றிய மிக சொற்பளவிலான தமிழ் அதிகாரிகளில் ஒருவராக குருபரன் கருதப்படுகின்றார்.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட சில வாரங்களில் அதாவது 2009ம்ஆண்டு ஜூன் மாதம் குருபரன் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குருபரன் குடும்பத்தருடன் கனடாவில்புகலிடம் கோரியிருந்தார். அரசாங்கப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் ஆபத்துஏற்படக் கூடும் என்ற அச்சத்தினால் புகலிடம் கோருவதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தப் புகலிடக் கோரிக்கையானது யதார்த்தமானதாக கருதமுடியாது என கனேடிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களுடன் குறித்த அதிகாரிக்குதொடர்பு இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, குருபரனினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடிசெய்துள்ளது.

குறித்த கடற்படை அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

கருணா தரப்பினர் தமது மனைவியை கடத்தி கப்பம் கோரியதாக குருபரன் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment