Tuesday, July 03, 2012
இலங்கை::தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசிய (புலி) கூட்டமைப்புக்கு அனுமதி மறுக்கப்பு:-
அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு மாவை சேனாதிராஜா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக அநுராதபுரம் சென்ற (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அவசர அவசரமாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவ்வாறு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள் கடுமையாகத் தாக்கி கை, கால்களை முறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமையினை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காக நானும் சுமத்திரனும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் அவசர அவசரமாக அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்ற வேளை அங்கிருந்து கைதிகள் போகம்பரை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என சிறை அதிகாரிகள் கூறினர்.
குறித்த கைதிகளில் ஒருவர் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து குறித்த கைதியை பார்வையிடுவதற்காக வைத்திய சாலைக்கு விரைந்து சென்ற சமயம் சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியில்லாமல் கைதியினை பார்வையிட முடியாது என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் ஆணையாளரின் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது. குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது எமது அழைப்புக்கு நீண்ட நேரமாகியும் எவ்விதமான பதிலும் கிடைக்கப் பெறவில்லை. இதனை அடுத்து தாம் வவுனியா நோக்கி விரைந்ததாக கூறினார்.
கைதிகளை மறைத்து வைத்திருப்பதன் மூலம் கைதிகள் தொடர்பான உண்மைகளை மறைத்து வைத்திருக்க முற்படுகிறார்கள் எனவும் (புலி)சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment