Tuesday, July 03, 2012
இலங்கை::கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேற்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேற்சைக் குழுக்கள் இம் மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.
தற்போது கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளினதும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகள் அண்மையில் கலைக்கப்பட்டன.
இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment