Tuesday, July 03, 2012
இலங்கை::கிளிநொச்சி, பளை பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஒரு தொகை வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவற்றில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம், ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அத்துடன் விமானங்களை அழிக்கவல்ல அதிசக்தி கொண்ட 75,000 குண்டுகளும், ஒரு இலட்சத்து முப்பத்து ஒன்பதாயிரம் எம்.ஜி.எம்.ஜி குண்டுகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment