Sunday, July 1, 2012

புலிகளுக்கு 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக சாட்சிங்களை முன்வைத்து: ராஜ் ராஜரட்னத்திற்கு எதிரான வழக்கு அமெரிக்க உயர் நீதிமன்றத்திற்கு!

Sunday, July, 01, 2012
75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரி, புலிகளின் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 30 உறவினர்கள், தமிழ் வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கு அமெரிக்க உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்;டுள்ளது.

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக சாட்சிங்களை முன்வைத்து, பிரபல சட்டத்தரணியான மைக்கல் எல்ஸ்னர் இந்த வழக்கை அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நுகேகொட, கோட்டை தொடருந்து நிலையம், பிலியந்தல, வெலிவேரிய ஆகிய இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, ராஜரட்னத்தின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் தண்டனை பெற்றுள்ள ராஜ் ராஜரட்னம் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment