Sunday, July, 01, 2012
சென்னை::ஜனாதிபதி பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் ஆசி பெற்றார். கூட்டணிக் கட்சிகளின் எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை சென்னைக்கு தனி விமானத்தில் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்து பேசினார். பின் பிரணாப் முகர்ஜிக்கு, நட்சத்திர ஓட்டலில் கருணாநிதி விருந்து அளித்தார். விருந்தில், பிரணாப் முகர்ஜிக்கு பொன்னாடை அணிவித்து, வள்ளுவர் கோட்ட வெள்ளிச் சிலையை பரிசாக கருணாநிதி வழங்கினார். பிரணாப் முகர்ஜியை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது: உங்களது வெற்றி உறுதிசெய்யப்பட்ட வெற்றி. எங்கள் உள்ளத்தில் நெருக்கமான மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் நீங்கள். ராம் மோகன் ராய், ரபீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், சத்யஜித் ரே, ஜோதி பாசு மற்றும் பல சிறந்த தலைவர்களை எந்த இந்தியராலும் மறக்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் உங்களது அர்ப்பணிப்பு பலனை தந்துள்ளது. ராணுவம், நிதி, வெளியுறவு, வருவாய், கப்பல் துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், பொருளாதார விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர். இந்தியாவின் ஜனாதிபதியாக பதவிவகிப்பதற்கு தகுதியானவர். தமிழகத்தில் இருந்து பிரசாரம் தொடங்கியிருக்கிறீர்கள். தமிழர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருப்பதை இந்த மாநிலம் எப்போதும் நினைவில் கொள்ளும். ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு நிச்சயமான ஆதரவை தருவோம். இவ்வாறு கருணாநிதி பேசினார். இதையடுத்து, பிரணாப் முகர்ஜி பேசியதாவது: எனக்கும் கருணாநிதிக்கும் இடையிலான நட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலானது. எனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் அவர் எனக்கு உதவியாக, வழிகாட்டியாக இருந்துள்ளார். அரசியலில் அவரது ஆசியுடனும் வாழ்த்துதல்களுடனும் பல்வேறு பணிகளை திறம்பட நிறைவேற்றியுள்ளேன்.
இப்போது அரசியலில் இருந்து விலகி, அரசியலுக்கு அப்பாற்பட்டு குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த பணியில் மகத்தான வெற்றியடைய திமுக தலைவர் கருணாநிதியின் ஆசியுடனும் வாழ்த்துதல்களுடனும் எனது பணியை தொடங்கியுள்ளேன். முன்னாள் குடியரசு தலைவர்கள் ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்றோர் வரிசையில் சிறப்பாக பணியாற்ற அவருடைய ஆசியை பெற வந்துள்ளேன். இந்த பதவியை நான் கேட்டு பெறவில்லை. சோனியா காந்தி எனது பெயரை பரிந்துரை செய்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெளியில் உள்ள சிவசேனா, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. உங்கள் அனைவரது வாக்குகளையும் கோருகிறேன். கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவு எடுக்காத கட்சிகளும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும் உங்கள் ஆதரவுடனும் எனது கடமையை சிறப்பாக நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், புதுவை முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோர் பிரணாபுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த விருந்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரசாரை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின், பார்க் ஷெரட்டன் ஓட்டலுக்கு சென்ற பிரணாப் முகர்ஜியை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்பி மற்றும் 10 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று இரவு சென்னை ஓட்டலில் தங்கியவர், இன்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

No comments:
Post a Comment