Sunday, July 1, 2012

வவுனியா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 28 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

Sunday, July, 01, 2012
இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கைதிகளுடைய கையடக்கத் தொலைபேசிகளும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் பணிப்புரைக்கு அமைய சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இதன்போது 28 கையடக்கத் தொலைபேசிகளும் 20 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் எற்பட்ட அமைதியின்மையை அடுத்து அங்கிருந்த கைதிகள் மூன்று சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 புலிகள் அமைப்பு சந்தேகநபர்கள் போகம்பரை மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

ஏனைய கைதிகள் அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment