Wednesday,July 04, 2012
இலங்கை::14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே மாதம் 23 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாள் ஒன்றில் அக்குரஸ்ஸ நகரில் உள்ள சந்தேகநபருக்கு சொந்தமான விடுதியொன்றில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவரை மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் தனியார் மகளீர் பணியகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
48 வயதான சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்..,
போலி பட்டங்களை வழங்கி பணம்பெற்றுவந்த கோடீஸ்வரர் மட்டக்களப்பில் கைது!
போலியான முறையில் முக்கிய பிரமுகர்களின் கையெழுத்துகளைப்பெற்று பெறுமதியான பட்டங்ளை பல்வேறு அமைப்புகளின் பெயரில் வழங்கி இலட்சக்கணக்கில் பணம் பெற்றுவந்த கோடீஸ்வரர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
காலியைச்சேர்ந்த மேற்படி நபர் இவர் பயணம் செய்த கார் சமஸ்த லங்கா சம்மான உபாதி சரசவிய –சமஸ்த லங்கா நெண குண பதனம என்ற அமைப்பின் பெயரில் அரச இலட்சிணை பொறிக்கப்பட்ட 300 போலியான நற்சாட்சிப்பத்திரங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை காலியைச்சேர்ந்த குறித்த நபர் மட்டக்களப்பு ‘ மங்களராம ரஜமஹா விகாரையில் விகாராதிபதியும் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமணரத்னதேரரிடம் நற்சாட்சிப்பத்திரங்களில் கையெழுத்துப்பெற வந்தவேளையிலேயே குறித்த நபரை விகாரையின் பாது காப்பு உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment