Wednesday, July 4, 2012

கோடியக்காட்டில் கடற்கரையில் புதைந்த இலங்கை படகு!

Wednesday,July 04, 2012
வேதாரண்யம்::நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் உதயன், சுமன் உள்ளிட்ட மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கோடியக்காடு பகுதியில் ஒரு படகு கரை ஒதுங்கி மண்ணில் புதைந்த நிலையில் இருந்ததை மீனவர்கள் பார்த்தனர். அப்பகுதியில் சில பிளாஸ்டிக் கேன்கள் மிதந்து கொண்டிருந்தது. அவற்றை அந்த மீனவர்கள் எடுத்துக்கொண்டு ஆறுகாட்டுத்துறைக்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வேதாரண்யம் கடலோர காவல்படை, சட்டம் ஒழுங்கு கியூ பிராஞ்ச் மற்றும் உளவுத்துறை போலீசார் கோடியக்காடு சென்று படகை பார்வையிட்டனர். படகு 2 அடி மணலில் புதைந்த நிலையிலும், தண்ணீர் நிரம்பியும் காணப்பட்டது. போலீசார், படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இலங்கையை சேர்ந்த அந்த படகில் மீனவர்கள் பெயரில் புலிகள் ஊடுருவியுள்ளனரா என உளவுத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment