Sunday, June 17, 2012

இழிவுப் பட்டியல் நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கையை நீக்கும் UN அமைப்பின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி!

Sunday, June, 17, 2012
இலங்கை::இழிவுப் பட்டியல் நாடுகளின் வரிசையிலிருந்துஇலங்கையை நீக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

சிறுவர் போராளிகளை இணைக்கும் நாடுகளை ஐக்கியநாடுகள் அமைப்பு இழிவுப் பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த இலங்கையின் பெயர் அண்மையில் நீக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத்மௌலானா தெரிவித்துள்ளார். தமது கட்சி சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு யுனிசெப் அமைப்பிற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து தற்பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும்,தற்போது ஆயுதங்கள் களையப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது - பிரசாந்தன்!

மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது. இது நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான குடியேற்றங்களினாலேயே தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இனமுறுகலும், கலவரங்களும் ஏற்பட்டது.
இது போன்று மீண்டும் இவ்வாறான நிலையில் திட்டமிட்ட சில முஸ்லிம் குழுக்களால் தாழங்குடா, வேடர் குடியிருப்பு, ஆரையம்பதி கிழக்கு பகுதிகளில் வேலி இடப்பட்டு அரச காணிகளும் தனியார் தமிழருக்குரிய காணிகளும் சுவீகரிப்புச் செய்யப்படுவதும், பின்பு அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு வேறு பிரதேசங்களில் இருந்து மக்களைக் குடியமர்த்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பலமுறை பிரதேச செயலாளர் பொலிசாருக்கு அறிவித்துள்ளதுடன், நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் இவை குறைந்தபாடாக இல்லை. இதனைத் தடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளிப் பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு குடியேறுவது சட்டத்திற்கு முரணானது. இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை பிரதேச செயலாளர்களுக்கு உள்ளது என சுட்டிக்காட்டியதனை அடுத்து, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுடாக இனங்களைக் குழப்ப நினைக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு ஆணை வழங்க வேண்டும் எனவும் விஷேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment