Sunday, June, 17, 2012இலங்கை::காத்தான்குடி இன்போ சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட செய்தியை அப்படியே வரிக்கு வரி பிரதி பண்ணி கேவலமான செய்தித் திருட்டு ஒன்றை புலி ஆதரவு தமிழ்வின் இணையத்தளம் மேற்கொண்டுள்ளது.
எமது செய்திகளை அடிக்கடி தமிழ்வின் திருடி வெளியிடுவதாக எமது வாசகர்களும் செய்தியாளர்களும் தகவல் தெரிவித்த போதும், அது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி இருக்கவில்லை.
குறித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி சிரேஷ்ட அமைச்சர் பௌசி கருத்து வெளியிட்ட செய்தி தொடர்பான முன்னோட்டம் ஒரு நாளைக்கு முன்னர் அதாவது வெள்ளிக்கிழமை இரவு எமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் சனிக்கிழமை பிற்பகல் முழுமையான செய்தி சனிக்கிழமை பிற்பகல் நாம் இந்த செய்தியை வெளியிடும் வரை எந்த ஊடகத்திலும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கவில்லை, மாத்திரமன்றி மட்டக்களப்பிலிருந்து தமிழ்வின் இணையத்தளத்துக்கு செய்தி வழங்கும் யாரும் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கவும் இல்லை.
இந்நிலையில் எமது செய்தி வெளிவந்து சில நிமிடங்களுக்கு உள்ளேயே செய்தியை அப்படியே பிரதி செய்து செய்தி மூலம் பற்றிய குரிப்புமின்றி பிரசுரித்து கேவலமான செய்தித் திருட்டை தமிழ்வின் செய்துள்ளது.
போர்க்காலங்களில் புலிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு, நில அபகரிப்பு உட்பட அனைத்து விடயங்களையும் மறைத்து வசதியாக தமது புலி விசுவாசத்தை காட்டிய இந்த இணையத்தளம் தற்போது போர் முடிவுற்ற காலத்தில் காலத்துக்கு காலம் முஸ்லிம் செய்தியாளர்களை இலக்கு வைத்து செய்திகளை எழுதி கேவலமான இனத்துவேச வேலைத்திட்டத்தை தமிழ்வின் மேற்கொண்டு வருகிறது.
கிரீஸ் பூதங்கள் பற்றிய பிரச்சினையின் போது மட்டக்களப்பு தாதியர் பாடசாலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் அரச புலனாய்வுத் துறையினர் பங்குபற்றியதை அறிந்திருந்தும், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜௌபர்கான் ராணுவத்தினருக்கு வீடியோவை வழங்கினார் என்று பொய் செய்தி வெளியிட்ட தமிழ்வின் அண்மையில் மட்டக்களப்பு கச்சேரியில் ஊடக இணைப்பாளராக பணியாற்றும் லத்தீபை இலக்கு வைத்து, அவர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவர் என்ற வகையில் சோடித்த செய்தி ஒன்றை எழுதிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இணையச் செய்தி மரபுகளில் செய்திகளை மீள்பிரசுரம் செய்யும்போது, செய்திமூலத்தைக் குறிப்பிட்டு வெளியிடுவது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகி உள்ளது. இந்த அடிப்படை ஊடக நாகரிகம் கூட பின்பற்றப்படாமல் கீழ்த்தரமான செய்தித் திருட்டு வேலைகளை செய்வதை தமிழ்வின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இச்செய்தி எழுதப்படுகிறது.
முஸ்லிம் செய்தியாளர்களை வேண்டாதவர்களாக்கி துவேச நெருப்பில் குளிர்காயும் புலி ஆதரவு தமிழ்வின்னுக்கு அவர்கள் சேகரிக்கும் செய்திகள் மட்டும் தேவைப்படுவது வியப்பானதே.
யுத்தம் முடிந்து செய்திப்பஞ்சம் வந்துவிட்டது என்பதற்காக செய்திகளை திருடி வெளியிடுவது பிச்சைக்கு போவதற்கு ஒப்பானது என்பதை தமிழ்வின் முகாமைத்துவம் புரிந்து கொள்ள வேண்டும்.காத்தான்குடி இன்போ(http://www.kattankudi.info.)
Kattankudi Web Community (KWC)
No comments:
Post a Comment