Sunday, June, 17, 2012இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்ததில், 34 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். லாண்டி கோட்டால் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில், நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். பரப்பரப்பான மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்ததால் பலி எண்ணிக்கை அதிகமானது. மேலும், 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தலைநகர் பெஷாவர் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் மார்க்கெட்டில் உள்ள பல கடைகள், வாகனங்கள் சேதம் அடைந்தன. கேஸ் சிலிண்டர் கடையில் சிலிண்டர்கள் வெடித்து தீப்பிடித்ததில் நிலைமை இன்னும் மோசமானது. ரிமோட் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். ஐந்து கிலோ வெடிமருந்து பயன்படுத்தி குண்டுகள் தயாரித்திருக்க வேண்டும். தீவிரவாதிகளை எதிர்க்க பழங்குடியின மக்கள் குழு அமைத்துள்ளனர். அரசுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவதால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மற்றொரு தாக்குதல் போலீஸ் வேனை குறி வைத்து நடத்தப்பட்டது. கோஹத் நகரில் நேற்று மாட்டு வண்டியில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸ் வேன் ஒன்று கடந்து செல்லும் போது, வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதில் 4 போலீசார் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
No comments:
Post a Comment