Sunday, June, 17, 2012இலங்கை::மாத்தளை பிரதேசத்தில் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியமை தொடர்பில் ஈரான் நாட்டவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்ததளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஈரான் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
வதிவிட விசாவின் மூலம் இலங்கைப் பெண் ஒருவருடன் வெளிநாட்டவர் வாழ்ந்து வருவதாக விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
சந்தேகநபர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment