Sunday, June, 17, 2012
இலங்கை::EPRLF செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.06.2012) பி.ப. 3.00 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள மக்கள் தலைவன் தோழர் பத்மநாபாவின் நினைவுதினத்தினை அனுஷ்டிக்க அவரின் கொள்கை வழி நடந்தோர் நடப்போர் நடப்பதற்காய் விரும்புவோர் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தோழமையுடன் அழைப்பு விடுத்துள்ளனர்...
இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில்!
அன்புடன் தோழர்களுக்கு
இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைய இருக்கின்றது.
கால் நூற்றாண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்று அதே அடிப்படைகளுக்காக, அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில்
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கம் வேண்டும், சிங்கள முஸ்லிம்
மக்களின் இணக்கமின்றி தீர்வு சாத்தியமில்லை, இந்திய சர்வதேச அனுசரணை அத்தியாவசியமானது, யதார்த்தங்களை
புரிந்துகொண்ட நுட்ப்பமான அணுகுமுறை தேவை என்ற அதே நிலைப்பாடுகளுக்கு அனைத்து தமிழர் தரப்பினரும் வந்து நிற்கின்றார்கள்.
கடந்த கால் நூற்றாண்டு காலம் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லில் அடங்காது. நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகள், வீராப்பு வசனங்கள்,உசுபேற்றும் அரசியல் எமது மக்களையும் தேசத்தையும் நாசம் செய்யும் என்கின்ற தீர்க்கதரிசனத்துடன், ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை நிறுத்தலாம்
என்கின்ற கனவுகளுடனுமே ஆயிரக்கணக்கான எமது தோழர்களும் பொது மக்களும் தமது உயிர்களை அன்று அர்ப்பணித்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் நிர்வாகம் ஒன்று பலப்பட வேண்டும் என்றே எமது தோழர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்ய வேண்டி நேரிட்டது.
பெருமை மிக்க எமது உன்னதமான தோழர்களை தியாகிகள் தினமான ஜூன் 19 இல் வருடா வருடம் நினைவு கூருவதில் EPRLF இனராகிய நாம் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது. இம்முறை தியாகிகள் தினத்தில் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் பினரான 25 வருடங்கள் பற்றிய மீள் பார்வை பற்றிய கலந்துரையாடல் விசேட அம்சமாகும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தோழமையுடன்
சிராப்.
No comments:
Post a Comment