Sunday, June, 17, 2012சென்னை::தமிழக போலீசில் கடந்த 1987, 1996, 1998, 1999, 2000ம் ஆண்டுகளில் எஸ்.ஐ.க்களாக பணியாற்றிய சுமார் 106 பேருக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து டிஜிபி ராமானுஜம் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். அதில் சென்னையைச் சேர்ந்த மஞ்சுளா, லட்சுமி, கண்ணகி, வகீதா பேகம், சரவணன், சிவபாலன், சேது, விஜயராகவன் உள்ளிட்ட 26 எஸ்.ஐ.களும் அடங்குவர். அவர்களில் 25 பேர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் வடக்கு மண்டலத் துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல வடக்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த ஒருவர், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment