Saturday, June 9, 2012

தனி ஆள் யோசனை நாடாளுமன்றில் TNA.!

Saturday, June, 09, 2012
இலங்கை::நாடாளுமன்றில் அனுமதிக்கப்படும் தனி ஆள் யோசனை நடைமுறைபடுத்தப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவர் நிகழ்த்திய உரையின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

09 06 சுமந்திரன் (முழு கட்டையும் ஒலிபரப்பவும்)

தனி உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமைய அமைச்சர்களினால் வழங்கப்படும் உறுதிமொழிகளுக்கு அமைய நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

அமைச்சர்களினால் அவ்வாறான உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னர் அவை, நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பார்ப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

அவ்வாறான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் நாடாளுமன்றம் பயனுள்ள அமைப்பாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய அமைச்சர்கள் நாடாளுமன்றில் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தாம் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment