Saturday, June 9, 2012

இலங்கை விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - ஜோன் அமரதுங்க!

Saturday, June, 09, 2012
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் வெளியிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரேவிற்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதேபோன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் வீசாவின் மூலம் இந்தியா விஜயம் செய்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே நாடு கடத்தப்பட்டார். இது ஓர் பிழையான அணுகுமுறை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை அரசியல்வாதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அந்நாட்டு மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ரெஜினோல்ட் குரே எதிர்நோக்கிய நிலைமை குறித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்றம் அதிருப்தியை வெளியிட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் லண்டனில் ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்ட விவகாரம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment