Saturday, June, 09, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்பாடல்களை மையமாகக் கொண்டு முறைப்பாடு எதனையும் செய்யத் திட்டமிடவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக அண்மையில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, மனித உரிமைப் பேரவை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய பொறுப்பாளர் ரொரி முன்கூவானின் மின்னஞ்சல் தொடர்பாடல்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
நவனீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக தமரா குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment