Saturday, June 9, 2012

அபராதம் செலுத்த முடியாத கைதிகளை சமூக பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை!

Saturday, June, 09, 2012
இலங்கை::அபராதம் செலுத்த முடியாமல்போன சுமார் ஆராயிரத்து நூறு சிறைக் கைதிகளை சமூகநல சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் சிறைக்ககைதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென அமைச்சர் சந்திரசிற கஜதீர தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்த முடியாத கைதிகளுக்கான தொகையை செலுத்துவதற்கு பல்வேறு தொண்டர் அமைப்புக்கள் மற்றும் நலன்புரி அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் சிறைச்சாலைகளில் நிலவுகின்ற கைதிகளின் நெருக்கடி நிலையை தவிர்க்க முடிவதுடன், நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார.

No comments:

Post a Comment