
Thursday, June, 21, 2012இலங்கை::பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதிகள் மக்கள் மத்தியில் முறையாகச் சென்றடைவதில்லை. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும்போது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தரமான திறமையான தலைவர் இதுவரை காணப்படாத நிலையே உள்ளது. இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். இதற்கு தழிழ் மக்கள் மத்தியில் ஒரு முறையான தலைமைத்துவம் இன்மையே காரணம் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்து அக்கிராம மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற போதும் தமிழர்கள் செறிந்து வாழும் வட கிழக்குப் பிரதேசம் அபிவிருத்தி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் 59712 விதவைகள் உள்ளனர். இதில் இளம் பெண்கள் அதிகம் உள்ளனர். எமது ஈரோஸ் அமைப்பு வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலும் பல அபிவிருத்திப் பணிகளையும் புணருத்தரண வேலைகளையும் மேற்கெண்டு வருகின்றது.
நான் வெளிநாடுகளில் பிச்சை எடுத்து அந்த நிதியினைக் கொண்டு இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றேன். அதன் அடிப்படையில் எமது அமைப்பின் மூலம் 650 பல்கலைக்கழக மாணவர்களின் கற்றலுக்கு உதவி வருகின்றோம்,198 பாலர் பாடசாலைகளுக்கும் ஏனைய விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விதவைகளுக்கும் உதவி வருகின்றோம்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக லண்டனிலுள்ள ஐயனார் ஆலயம் ஒன்று மட்டக்களப்பிலுள்ள மூன்று தமிழ் தேசியக் கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 67500 டொலர் நிதியினை வழங்கியிருந்தது. இந்த நிதி மக்களுக்கு சென்றடையவில்லை. இதற்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை
இதுபோன்று மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் எமது அமைப்பு ஒருபோதும் ஈடுபடமாட்டாது என்பதனையும் இந்த களுமுந்தன்வெளிக்கிராம மக்களுக்கு வீட்டுத்திட்டம் மலசலகூடங்கள் பொதுக் கிணறுகளையும் நான் அமைத்து தருவேன் எனவும் மக்கள் மத்தியில் உறுதி கூறுகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment