
Thursday, June, 21, 2012ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தொடர்பான ரியோ + 20 மாநாட்டில் பங்குபற்றுவ தற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுமுன்தினம் பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனய்ரோ நகருக்குப் பயணமானார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தொடர்பான இம்மாநாடு நேற்று ஆரம்பமானதுடன் நாளை மறுதினம் 23 ஆம் திகதி வரையும் நடைபெறவிருக்கின்றது.
அரச தலைவர்கள் பங்குபற்றியுள்ள இம்மாநாட்டின் தொடக்க நாளான நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐந்தாவது பேச்சாளராக சொற்பொழிவாற்றினார்.
அதேநேரம் இம்மாநாட்டுடன் இணைந்ததாக இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங், நேபாளப் பிரதமர் பாபு ராம் பட்டாரி, பூட்டான் பிரதமர் லியோ ன்சென், ஜிக்கே தின்லி, சிலி ஜனாதிபதி செபஸ்தியன் பினேரா இசெனிகிவி உட்பட பல அரச தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்தித்துப் பேசவிருக்கின்றார்.
வறுமை ஒழிப்புக்கென நிலையான அபிவிருத்தி ஊடாகப் பசுமை பொருளாதாரத்தை உருவாக்கல், நிலையான அபிவிருத்திக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டத்தை முன்வைத்தல் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறுகின்றது. அதேநேரம், உணவு பாதுகாப்பு, விவசாயம், பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படுகின்றது
இம்மாநாட்டில் அமைச்சர்கள் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மகிந்த அமரவீர, பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறு ப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சுற்றாடல் அமைச்சர் உதய கம்மன்பில உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளுகிறார்கள்.
No comments:
Post a Comment