Sunday, June 24, 2012

யாழ்குடாநாட்டில் வயது குறைந்தவர்களின் சிகரட் பாவனை அதிகரித்து வருகிறது - யாழ் மதுவரித் திணைக்களஅதிகாரி நாகையா கிருபாகரன்!

Sunday, June, 24, 2012
இலங்கை::யாழ் குடாநாட்டில் வயது குறைந்தவர்களின் சிகரட் பாவனை அதிகரித்து வருவதாக யாழ் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி நாகையா கிருபாகரன் கவலை வெளியிட்டுள்ளார்.

சிறுவயது சிகரட் பாவனையை தடுப்பதற்கு மாணவர்களிடையே விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட யாழ் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி நாகையா கிருபாகரன் வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களின் தகவல்களை மதுவரித் திணைக்களத்திற்கு அறியத் தருமாறு கோரியுள்ளார்.

வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பட்ட அவர் அவற்றையும் மீறி சில வர்த்தக நிலையங்கள் சிறுவர்களுக்கு சிகரட்டை விற்பனை செய்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்; சிறுவர்களுக்கு சிகரட்டை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு இந்த வாரம் தலா 4000 ரூபா குற்றப்பணம் அறவிட்டதாக தெரிவித்தார்.

இந்த வகையில் இளவயதில் சிகரட் பாவிப்பதனை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்ப பொதுமக்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என யாழ் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி நாகையா கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment