Sunday, June, 24, 2012இலங்கை::முல்லைத்தீவு, வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் வெடிபொருட்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
350 கிலோகிராமுக்கும் அதிகளவிலான வெடிபொருட்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment