Sunday, June, 24, 2012இலங்கை::யாழ் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் வெற்றுக் காணிகள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டிய இடங்கள் மற்றும் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோரது நிலைப்பாடுகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் 25ம் திகதி இவ் விடயங்கள் தொடர்பில் உயர் மட்டக் கூட்டமொன்றை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர் அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்...
யாழ் நிர்வேலி காமாட்சி அம்பாள் தொழிற்சாலைக்கு அமைச்சர் விஜயம்!
யாழ் நிர்வேலி காமாட்சி அம்பாள் தொழிற்சாலைக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிற்பகல் விஜயம் செய்தார்.
தனது அமைச்சின் ஊடாக மேற்படி தொழிற்சாலைக்கென அமைச்சர் அவர்கள் ஏற்கனவே 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டிடப் புனரமைப்பு வளாகத் தேவைகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றிற்காக இந்நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஒரு காலகட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்துள்ள இத் தொழிற்சாலை கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு செயற்பாடுகளின்றி காணப்பட்டது.
இந் நிலையில் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா அவர்கள் முன்வந்து மேற்படி நிதியுதவியை வழங்கியிருந்தார்.
இன்றைய தினம் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் பூரண திருப்தியடையாத நிலையில் இத் தொழிற்சாலையை உடனடியாக செயற்திறன் மிக்கதாக மாற்றியமைப்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜி.ஐ.இசெட் நிறுவன அதிகாரிக்கு பணிப்புரை வழங்கினார்.
இதன்போது தங்களுக்கு காட்சியறை ஒன்றும் மூலம் பொருட்களுக்கான நிதியுதவியும் தேவையென நிர்வாகத் தரப்பால் கூறப்பட்டது. அறிக்கை கிடைத்த பின் மூலதனக் கொள்வனவிற்காக 5 இலட்சம் ரூபா ஒதுக்கித் தருவதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் காட்சியறை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் பணிப்பாளர்கள் கைத் தொழில் அபிவிருத்திச் சபையின் பொதுமுகாமையாளர் உதவிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment