Sunday, June, 24, 2012இலங்கை::பதவி பெரிதல்ல தூக்கி எறிந்து விட்டுவருவோம், நாங்கள் எப்போதும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டோம் என்பதும், எதிர்க்கட்சிகள் பலம் பெறுகின்றன என்பதும் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் என்பதும் இறுதி நேரத்தில் மக்களை உணர்ச்சியூட்டத் தூண்டிவிடும் வெற்றுக் கோஷங்கள் என்பதை இப்பொழுது ஒவ்வொருபாமரக் குடிமகனும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.
இப்பொழுது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமான வாத விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இயல்பாகவே மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் கொஞ்சக்காலம் இருக்கின்றபோதிலும் இப்போது இருக்கும்சூட்டோடு சூடாக மாகாணசபையைக் கலைத்து தேர்தல் நடத்தினால் நல்ல அறுவடையைப் பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கூட முன்னுக்கு வந்து மாகாகாண சபையைக் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் தந்து விட்டார்.
இபபோதிருக்கும் நிலைமை தங்களுக்குச் சாதகமாகஅதாவது ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாலேயே மாகாணசபையைக் கலைத்துத்தேர்தல் நடத்துவதற்கு இந்த அவசரம் என்று அரசை ஆதரிப்போர் அடித்துக்கூறுகின்றனர்.
இதனிடையே கிழக்கு மாகாணசபையின் அடுத்தமுதலமைச்சர் முஸ்லிமா அல்லது மீண்டும் தமிழரா என்பதுதான் இந்தத் தடைவ நடைபெறவுள்ள கிழக்குமாகாணசபையின் தேர்தல் விஞ்ஞாபனமாக எல்லோராலும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
பயங்கரவாதத்திலிருந்த விடுவிக்கப்பட்டகிழக்கில் ஏற்கெனவே ஒரு தமிழ் முதலமைச்சர் அரசாண்டு விட்டார். எனவே அடுத்து அரசாளும்அருகதை முஸ்லிம்களுக்கு உண்டு. அந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்குத் தரப்படவேண்டும் என்று ஒருசாராரும் வாதிட்டு தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.
அதேவேளை, நடுநிலையில் நின்று நிதானித்து உற்றுக்கவனிக்கும் மற்றும் ஒருசிலரோ கிழக்கின் அடுத்த முதலமைச்சர் தமிழரா முஸ்லிமா சிங்களவரா என்பதல்ல முக்கியம்.முதலமைச்சராகப்போகும் நபர் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்கள்,சிங்களவர்கள், வேடுவர்கள் உள்ளிட்ட சகல தரப்பாரையும் அரவணைத்து ஆட்சி செய்யும் யோக்கியதையைக்கொண்டுள்ளாரா என்பதே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
ஆனால், கிழக்கில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப்பதிலாக பயங்கரவாதம் நிலவிய சூழ் நிலைகளிலும், தற்போதைய நிலைமையிலும் கூடபயங்கரவாதப் பின்புலம் கொண்டோரும் இன ரீதியிலான அரசியல் பிழைப்பு நடத்துவோரும்கிழக்கில் இன முறுகலை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏற்படுத்தி வந்திருக்கின்றார்கள் என்பதுவெளிப்படை.
இப்பொழுதும் கூட அரசியல் நடத்துவோரால்இத்தகைய கீழ்த்தரமான இனத்துவப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தனியே தமிழர்கள்வாழும் பகுதிகளில் ஒரு வகைப் பிரச்சாரமும் அதே நபர்கள் முஸ்லிம்பகுதிகளுக்கு வந்தால்இன்னொரு வகைப்பிரச்சாரமும் தமிழ் முஸ்லிம்சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றால் இன்னொரு வகைப்பிரச்சாரமும் என்று தமதுவியூகங்களை மாற்றி மாற்றி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
உண்மையில் ஒரு இணக்கப்பாட்டுடனான நல்லாட்சியைகிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு அரசியல் வாதிகளின் இத்தகைய கீழ்த்தரமானநடவடிக்கைகள் ஒரு சாபக்கேடாகவே அமைந்துள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும்குந்தகமாகவே அமைந்து விட்டிருக்கின்றது.
பயங்கரவாதத்தால் நிலைகுலைந்து வாழ்க்கைசீரழிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் நிம்மதியான வாழ்வும்நிலை பேறான அபிவிருத்தியும் கிடைக்கப் பெற வேண்டுமாக இருந்தால் இனத்துவேசமற்ற ஆட்சியாளர்கள் மக்களால் இனங்காணப்பட வேண்டும்.
பயங்கரவாதப் பின்னணியைக் கொண்டவர்களும்,பாமர மக்களை ஏமாற்றி இனத்துவேஷத்தை வளர்த்து அதில் பிழைப்பு நடத்துவோரும் அவர்கள் எந்தசமூகத்தின் பின்னணியில் இருந்து வந்தாலும் இவர்களால் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டையும் நல்லாட்சியையும் கொண்டுவர ஒரு போதும் அவர்களது மனப்பாங்குகள் இடமளிக்காது என்பதே கடந்தகால அனுபவமாகும்.
கடந்த காலத்தில் இழந்தவை எல்லாம் ஒருபுறமிருக்க இனி நிம்மதியான வாழ்வாவது நமக்கு கிடைக்க வேண்டும் என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். முக்களின் இந்த ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டுள்ள தமிழரோ முஸ்லிமோ சிங்களவரோ கிழக்கு மாகாணத்தை ஆள அருகதை உடையவர்கள் என்பதை அழுத்திக் கூறியாக வேண்டும்.
சகல சமூகங்களையும் நேசிப்பவர்களும் தூரநோக்கோடு சிந்திப்பவர்களும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மக்களை நிம்மதியாக வாழவைப்பதற்குப் பாடுபட்டவர்களும் இந்தக் கிழக்கு மாகாணத்தை ஆள்வதற்குச் சாலச் சிறந்தவர்கள். இத்தகையவர்களை இனங்கண்டு கொஞ்சக்காலமாவது அவர்கள் கையில் ஆட்சியைஒப்படைத்து விட்டு இழந்து போன சமூக ஒற்றுமையையும் நிம்மதியையும் மீளக்கொண்டு வருவதற்கு மக்களும் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும்.
இதேவேளை மாகாணசபை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேஷம் கொண்டவர்களுக்கு இடமளித்தால் அது கிழக்கில் வாழும் எல்லோரது நிம்மதியான வாழ்வையும் சீரழித்து விடும் என்பதை எச்சரிக்கையோடு நாம் புரிந்து கொள்ளுதல் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
KWC.
No comments:
Post a Comment