Saturday, June 30, 2012

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது - சம்பந்தன்!

Saturday, June 30, 2012
இலங்கை::அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேனனின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவின் மற்றுமொரு முனைப்பாகக் கருதப்பட வேண்டுமெனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்தமை குறித்து மேனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலும் இந்தசந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு அர்த்தமுடையதாகவும், நோக்கமுடையதாகவும்இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதன்பின்னரே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து தீர்மானிக்க முடியும்என்பதனை மேனனுக்கு விளக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ஷிவ்சங்கர் மேனனை சந்தித்த போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment