Saturday, June 30, 2012

புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன - பாதுகாப்பு அமைச்சு!

Saturday, June 30, 2012
இலங்கை::புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துஇவ்வாறு புகலிடம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தமது பிள்ளைகள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றை வழங்குமாறு மேயரிடம் கோரியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வர்த்தகரின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும், வீசாவை நீட்டித்துக் கொள்ள இவ்வாறு போலி ஆவணமொன்று அவசியப்படுவதாக அந்நாட்டு சட்டத்தரணி வழங்கிய ஆலோசனைக்கு அமைய வர்த்தகர் போலி ஆவணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு பலர் போலியான முறையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் அச்சுறுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் குற்றம் சுமத்திவருவதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இவ்வாறு போலியான முறையில்மேற்குலக நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment