Sunday, June 24, 2012

யாழில் பெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது!:-துப்பாக்கியுடன் மூவர் கைது!

Sunday, June, 24, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த பெண் கடந்த 22ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்...

துப்பாக்கியுடன் மூவர் கைது!

நாவலப்பிட்டி, உலப்பனை பகுதியில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்

No comments:

Post a Comment