Sunday, June 24, 2012

கடலோர காவல்படையிடம் தமிழக மீனவர்கள் 9 பேர் ஒப்படைப்பு!

Sunday, June, 24, 2012
மண்டபம்::இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஒன்பது பேர், சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை சிவபெருமாளின் விசைப்படகில், 9 மீனவர்கள், ஜூன் 19 ல், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திசைமாறி இலங்கை பகுதிக்குள் சென்றனர். அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். முதல்வர் ஜெ., முயற்சியால், மீனவர்கள் 9 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில், மண்டபம் இந்திய கடலோர காவல்படையிடம், நேற்று மாலை 4 மணிக்கு ஒப்படைத்தனர்.
கடலில் பலத்த காற்று காரணமாக, மீனவர்களை கரைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. "அவர்கள், இன்று காலை மண்டபம் வந்து சேர்வர்' என, கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment