Sunday, June, 24, 2012ஜெனீவா::2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ள விவகாரம் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும், சுவிஸ் குடிவரவு குடியகழ்வுதிணைக்களமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் மாதந்தோறும் 100இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணபப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்களில் பலர் புகலிடம் கோருவதற்கான சரியான காரணங்களை காட்டுவதில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள்சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இரண்டாயிரம் இலங்கையர்களை நாடு கடத்தத்திட்டமிட்டுள்ள போதிலும் அவர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதிஅளிக்கப்படும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment