Saturday, June 23, 2012

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உதவ முன் வரவேண்டும்-பிரசாந்தன்!

Saturday, June 23, 2012
இலங்கை::யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உதவ முன் வரவேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக நடை பெற்ற யுத்தத்தில் அதிக தொடர் பாதிப்புக்களை நேரடியாக அனுபவித்து வந்தவர்கள் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களே. இவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு அமெரிக்க சமூகம் எமக்கு மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பாராட்டுவதுன் தொடர்ந்தும் உதவிகளை புரிய வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபையினை இன, மத, மொழி பேதங்களை கடந்து சிறப்பாக செவ்வனே ஆட்சியை நடத்தி வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான கௌரவ சி.சந்திரகாந்தன் எந்த நோக்கோடு மாகாண சபையை வழி நடத்துகின்றாரோ அதைப்போன்று US AID நிறுவனம் கிழக்கு மாகாணத்தின் இன ஒற்றுமைக்கான பல அர்ப்பணிப்பான சேவைகளை புரிந்து வருகின்றது. இவை நிறுத்தப்படக் கூடாது தமிழர்களின் பல்வேறு தேவைப்பாடுகள் இன்னும் பூர்த்தியாக்கப்படாமலே உள்ளது. கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம் என்று அனைத்துத் தேவைகளும் இன்றும் தேவைப்பாடாகவே உள்ளது.

ஆறு தசாப்தங்கள் தேவைப்பாடாக இருந்தவற்றை நான்கு வருடங்களில் பூர்த்தி செய்வது என்பது முடியுமான காரியமல்லிருந்தாலும் கிழக்கு மாகாண சபை முடியுமானளவு அத்திவாரமிடும் பணியினை மேற்கொண்டு வருகின்றது. இவற்றினை மேலும் வலுவாக்குவதற்கு அமெரிக்க மக்களின் பூரண ஆதரவு வேண்டு மென்று மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபை மூலம் மட்டக்களப்பு பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பாக பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டு மாநகர முதல்வர் திருமதி பிரபாகாரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக அமெரிக்கா உயர்ஸ்தானிகர் பற்ரீசியா எ.பூட்டின், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி.சாள்ஸ் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment