
Saturday, June 23, 2012ஜகார்தா::இந்தோனேசிய விமான படை விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்ததில் 9 பேர் பலியாயினர். இந்தோனேசிய விமானப் படை வீரர்கள் ஜகார்தாவில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஃபாக்கர் எப்27 என்ற சிறிய விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தரையிறங்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் மோதி தீப்பிடித்தது. இதில் பல வீடுகள் நொறுங்கின. மக்கள் அலறி கொண்டு ஓடினர். தகவல் அறிந்து மீட்புப் படையினர் ராணுவத்தினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பொதுமக்கள் 3 பேர், பைலட், துணை பைலட், பயிற்சியாளர், பயிற்சி பெறும் வீரர்கள் உள்பட 9 பேர் பலியாயினர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் சிக்கிய விமானம் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பயிற்சிக்கு செல்லும் முன்பு கூட முழு ஆய்வு செய்யப்பட்டது. வானிலையும் சரியாகதான் இருந்தது. எப்படி விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment