Saturday, June 23, 2012

சுதந்திர ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்!

Saturday, June 23, 2012
இலங்கை::சுதந்திர ஊடக நிறுவனத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

சுதந்திர ஊடக நிறுவனத்தில் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற பல மில்லியன் ரூபா பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

2008, 2009ம் நிதியாண்டுகளில் சுமார் 40 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவன ஆணையாளருக்கு சுதந்திர ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, சுதந்திர ஊடக நிறுவனத்தில் கடமையாற்றிய சிலர் உயிர் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment