Wednesday, June 20, 2012

தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பற்றாக்குறைக்கு புலிகளே காரணம் - கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Wednesday, June 20, 2012
இலங்கை::நாட்டில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டதாலும் கல்வி கற்ற சமூகத்தினர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தமையினாலும் தமிழ் சமூகம் கல்வியில் பின்னடைந்துள்ளனர். இதனால் தான் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் பெரும் குறைபாடுகள் நிலவி வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment