Thursday, June 21, 2012

தொடரும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள்!

Thursday, June, 21, 2012
இலங்கை::வடபகுதியில் இன்னும் நிலக்கண்ணிவெடி அகற்றப்படாத வலயங்களை அண்மித்து மீள்குடியேறியுள்ளவர்கள் தங்களின் பிள்ளைகள் குறித்து கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என இராணுவத் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுவர்கள் அந்த வலயங்களுக்குள் சென்று அங்குள்ள அடையாளம் காணப்படாத பொருட்களை விளையாடுவதற்காக கையாள முற்படுவதால் அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டார்.

பெருமளவிலான வலயங்களில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அந்த பிரதேசங்கள் வாழ்வதற்கு உகந்தவையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான கவனயீனமே அண்மைக்காலமாக சிறுவர்கள் அனர்த்தங்களுக்கு உள்ளாவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்னும் சில வலயங்களிலும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment