Wednesday, 20th of June 2012புலிகள் போன்ற குழுக்களின் நடவடிக்கைகளை லக்ஸம்பேர்க் அதிகார பீடங்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருப்பதாகவும் இவ்வாறான நடவடிக்கை பற்றி மிகுந்த விழிப்புடன் இருக்க போவதாகவும் லக்ஸம்பேர்க் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஜீன் அஸல்போண் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம், லக்ஸம்பேர்க் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத்ஆரியசிங்க தனது பதவிக்காலம் முடிந்து இலங்கை திரும்பவுள்ள நிலையில் விடைபெறுவதற்காக சென்ற போதே அஸல்போண் இக்கருத்தை வெளியிட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் எச்சசொச்ச உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி கருத்துரைத்த தூதுவர் ஆரியசிங்க லக்ஸம்பேர்க் போன்ற நிதி மற்றும் வங்கி மத்திய நிலையங்கள் தம்மை தமிழீழ விடுதலை புலிகள் போன்ற குழுக்கள் துஷ்பிரயோகம் செயவ்தை தடுக்கும் வகையில் மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
லக்ஸம்பேர்க்கிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்க லக்ஸம்பேர்க் பயண அதிகார பீடங்கள் உதவ வேண்டுமென இலங்கை தூதுவர் கேட்டுக்கொண்டார். இரண்டு நாடுகளுக்கு இடையில் பொருளாதார தொடர்புகள் அதிகரித்திருப்பதையும் லக்ஸம்பேர்க்கில் இலங்கை கூடிய கவனத்துக்கு உள்ளாகியிருப்பதையும் பிரதி உதவி பிரதமர் அலஸ்போண் வரவேற்றார்.
No comments:
Post a Comment