Wednesday, June 20, 2012

சென்னை புழல் அகதிகள் முகாமில் தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்!

Wednesday, 20th of June 2012
சென்னை::19.6.12 அன்று காலை 8.00 மணிக்கு சென்னை புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் நடத்திய அஞ்சலி நிகழ்வும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.ஐக்கிய பொது உடமை கட்சி உப தலைவர் தோழர் சங்கர் தோழர்பத்மநாபா திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலிக்கு வந்திருந்த தோழர்களும்,பொதுமக்களும் கியூ வரிசையில் நின்று பூ தூவி பத்மநாபா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
புழல் அகதிகள் முகாமில் உள்ள பத்மநாபா வாசிசசாலை முன்பாக நடைபெற்ற இந்நிழ்வானது பத்மநாபா-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்ஸ்ரனிஸ் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய பொது உடைமைக்கட்யின் உப தலைவர் சங்கர் சிறப்புரை ஆற்றினார்.அவர் தனது உரையில் இன்று இலங்கைத் தமிழர் நிற்கதியாக உள்ளதற்கு மூல காரணகர்த்தா பிரபாகரனதான் என்றும,; இயக்கங்களின் ஒற்றுமைய குலைத்து இயக்க தலைவர்களை கொலை செய்து இறுதியில் ஒன்றுமில்லாமல் செத்துப்போனதன் மூலம் தமிழர்களுக்கு மாபெரும் துரோகத்தை பிரபாகரன் செய்துவிட்டு மறைந்துவிட்டார் என்று கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினரும் பத்திரிகையாளருமான தேவராஐ; தனது உரையில் இலங்கையில் இந்திய அரசால் எற்படுத்ததப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு ஒரு அடிக்கல்லாக திகழ்ந்தது. அதனை சீர்குலைத்தன் மூலம் தமிர்ழர்களை நிர்கதியாக ஆக்கியவர்கள் புலிகள் என உரைத்தார்.
புழல் முகாம் தலைவர் ராஐ தனது உரையில் “நாங்கள் இங்கு இருக்கும் வரை பத்மநாபாவின் புகழை மங்கவிடோம் எனக் கூறினார்.

ஐக்கிய பொது உடமைக் கட்சி முக்கியஸ்தர் தோழர் ரணா தனது உரையில்,ஒற்றுமையின்மையே எல்லாத்துக்கும் காரணம் என்றும் பத்மாநாபா போன்ற தலைவர்கள் சிந்தனைகள் இன்று எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாங்களும் இந்த உலகும் உணர்கிறது என பேசினார்.

ஈ.என்.டி.எல.எப் தோழர்குட்டி பேசும் போது பத்மநாபாவை நான் பார்த்ததில்லை அவர் கொள்கைகளை நான் அறிவேன் அவர் ஒரு மாமனிதர் எங்கள் கட்சியும் அவர்கட்சியும் ஒரே பாதையில் பயணித்தோம். பாதவர்கள் அவரை கொன்று விட்டனர் என்றார்.
இறுதியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்சஞ்சி அவர்களின் நன்றியுரையுடன் தியாகிகள் தனி நிகழ்வு நிறைவு பெற்றது...

No comments:

Post a Comment