Wednesday, 20th of June 2012சென்னை::இலங்கையில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்கும் என்று இலங்கை அமைச்சர் மிரட்டல் விடுத்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் (23 ம் புலிகேசி) கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து ஐ.நா.சபையில் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இலங்கை முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒரு நூற்றுக்கணக்கான படுகொலை நடக்கும்’ என்று இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா மிரட்டல் விடுத்துள்ளதாக எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு கடுமையான ஆத்திரத்தை மூட்டுகிறது. அவரது பேச்சு கண்டனத்துக்கு உரியது. இலங்கை அமைச்சரின் இந்த பேச்சால் உலக முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் இந்த பிரச்னையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். மேலும், இலங்கை அரசின் சித்ரவதை போக்கை ஐ.நா. சபையில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment