Friday, June 22, 2012

புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகல் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில்!

Friday, June, 22, 2012
இலங்கை::புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிப் போராளிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்து கொள்ளும் பணிகள் இன்று (22) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் மாவட்டத்திற்கு தலா 300 பேர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இவ்வாறு ஆயிரத்து 500 பேர் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்து கொள்ளப்பட உள்ளனர்.

இவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாமால் ராஜபக்ஷவின் எண்ணகருவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment