Friday, June, 22, 2012கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே விபத்துக்குள்ளான படகில் இருந்து மீட்கப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சமுத்திரத்தின் பாதுகாப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனை தமக்கு அறிவித்துள்ளதாக அவர் நியூஸ் பெஸ்ட்டுக்குக் கூறினார்.
இந்த விபத்தினால் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான படகில் மேலும் 90 பேர் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களைத் தேடும் பணியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment