Friday, June, 22, 2012இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியடசகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று மாலை திணைக்கள கூட்டுத்தாபன அதிகாரிகள், பொதுமக்கள், போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்றவீதி விபத்துக்களும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகளும் பற்றிய பொதுக் கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வீதிவிபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைமை பற்றி பல்தரப்புக் கலந்துரையாடல்கள்அங்கு இடம்பெற்றன. வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள், உடமை அழிவுகள் மற்றும் அநாவசிய நெருக்கடிகள் என்பனவற்றைத் தடுக்கும் வகையில் முடிந்தளவு சட்டத்திற்குப்புறம்பான விடயங்களில் எதுவித தயவு தாட்சண்யமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரிகளைப் பணித்தார்.
கடந்தஆண்டு 706 வாகன விபத்துக்கள் இடம்பெற்றன. இவற்றில் 54 பேர் மரணித்திருந்தார்கள். வீதிஒழுங்கு முறைகளை மீறியதாக கடந்த ஆண்டு 47278 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த ஆண்டு ஜுன் மாதம் வரையில் வாகன விபத்துக்களினால் 29 பேர்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 250 பேருக்கு மேல் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியமைக்காக தண்டிக்கப்படுகின்றார்கள் என்று உதவிப் பொலிஸ்அத்தியடசகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
No comments:
Post a Comment