Thursday, June, 21, 2012ரியோ டி ஜெனிரோ::சுற்றுச்சூழல் தொடர்பான ப்ளஸ் 20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு முன், கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், சீனாவுடன் இந்தியா நல்ல உறவு கொண்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், உண்மையிலேயே சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியாபாவ் தவிர, இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் கூறும் போது, ‘இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகச் சிறந்தது என்றார். இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்கட்டமைப்புத் துறையில் சீனாவின் மேம்பாட்டு முயற்சிகளை வரவேற்பதாகவும், கல்வித் துறையிலும் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.
No comments:
Post a Comment