Tuesday, June, 19, 2012ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களில்ஒன்றான யுனெஸ்கோ அமைப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு கிரமமாக அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதாக பாரிஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கதெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போதுயுனெஸ்கோ ஒரு தலைபட்சமான தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரேபிய கிளர்ச்சியின் போது யுனெஸ்கோவின்பக்கச்சார்பான நிலைப்பாடு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ அமைப்பு அரசியல் மயப்படுவதனை தடுத்துநிறுத்த உலக நாடுகள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment