Tuesday, June, 19, 2012இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நண்ணீர் மீன்பிடியாளர்களுக்கான தோணி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.இந்த வைபவம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
கடற்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள தேசிய நீரகங்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமிய நண்ணீர் மீன்பிடியாளர் சங்கத்தைச்சேர்ந்த 20 பேருக்கு மீன்பிடி தோணிகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன...
தமிழ் மக்கள் பிரதேசவாத அரசியல், பலகட்சி அரசியலை தவிர்த்து, ஒன்றுபட்ட தேசிய அரசியலில் பயணிப்பதன் மூலமே சகல வளங்களையும் உரிமைகளையும் பெற்ற மக்களாக வாழமுடியும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற, மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின், மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் பொன்னம்பலம் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இன்று எமது மாவட்டம் அனைத்து துறைகளிலும் பாரிய வளர்ச்சியை அடைந்துவருகின்றது. கிட்டத்தட்ட 1300 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கூட வழங்கப்படவுள்ளன. எந்தவொரு அரசாங்கமும் செய்யாத விடயங்களை இன்று இந்த அரசாங்கம் செய்துதருகின்றது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகளை பரப்பி கிளை தலைவர்களை நியமித்து அதனூடாக கிராமங்கள் தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டு அவை நேரடியான ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவற்றை நேரடியாக தீர்த்து தரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்களது காலத்தை கடந்த 30 வருடகால யுத்தத்தில் கடத்திவிட்டோம். இனி எமது எதிர்கால சந்ததியை சிறந்த சந்ததியாக உருவாக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் வருகின்றது என்று வாந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வந்துயாரும் பிடிக்கமுடியாது. அவ்வாறான நிலையேற்பட்டால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கையெடுப்பதற்கு அப்பகுதி பிரதேச செயலாளருக்கு முழு உரிமையிருக்கின்றது. அதற்கு நாங்கள் அரசியல் பலத்துடன் பின்னணியில் உள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் யாரும் விளையாடமுடியாது.அவர்களின் தகுதிகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்ற அனைவரும் திறமையின் அடிப்படையில் உள்வாங்கப்படுவர். அதுபோதுன்று 2010-2011ஆம் ஆண்டு பட்டம் முடித்தவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு உள்வாங்கப்படுவர். அதற்கான பேச்சுவார்த்தைகளில் நான் ஈடுபட்டுள்ளேன்.
30 வருடகால போராட்டத்தில் எதுவும் அற்று இருந்த நாம். இன்று ஒரு குறுகிய காலத்தில் அனைத்தையும் செய்யமுடியாது. ஆனால் பெருந்தொகையான அபிவிருத்தி இடம்பெறும் ஒரேயொரு மாவட்டமாக மட்டக்களப்பு மாறியிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment