Tuesday, June 19, 2012

அமெரிக்காவின் இராஜதந்திர சூழ்ச்சிப் பொறிக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது - குணதாச அமரசேகர!

Tuesday, June, 19, 2012
இலங்கை::அமெரிக்காவின் இராஜதந்திர சூழ்ச்சிப் பொறிக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, அரசாங்கத்தின் கொள்கைகள் தடம் புரள்வது நாட்டுக்குப் பேராபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளது.

மேற்குலகின் சூழ்ச்சிப் படலத்தின் முதலாவது அம்சமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் எனவும் குறிப்பிட்டிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, இந்த விஜயத்துக்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே ஐ.நா. குழு ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிகின்றது.

இதற்கு இலங்கை அரசும் அனுமதி வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குழுவினர் வந்து சென்ற பின்னர் நவநீதம்பிள்ளையும் கொழும்புக்கு வருகைதர இருக்கின்றார்.

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிப் படலத்தின் முதல் அத்தியாயமே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமாகும்.

ஜெனீவா தீர்மானத்தை அரசு விமர்சித்துள்ளது. அப்படியானால் ஐ.நா. குழுவை எதற்காக நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வது தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.

அமெரிக்காவின் சூழ்ச்சியால் இலங்கை அரசின் கொள்கை தடம்புரள்கின்றது. அந்நாட்டின் சூழ்ச்சி வலையில் சிக்கும் நிலைப்பாட்டையே அரசு எடுத்துள்ளது.

இது நாட்டுக்கு நல்லதல்ல எனக் கூறிவைக்க விரும்புகின்றோம். இதனால் எற்படக்கூடிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்கவே வேண்டும் என்றார் குணதாச அமரசேகர,

No comments:

Post a Comment