Tuesday, June, 19, 2012சென்னை::விழுப்புரத்தில் நடைபெறவுள்ள தமிழ் ஈழ (புலி) ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு சர்வதேச அளவிலில்(புலி) ஆதரவாளர்கள்) மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச தலைவர்கள், இந்தியத் தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து மிகப் பிரமாண்டமான முறையில் இந்தத மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம்.
மதுரையில் நடந்த முதலாவது டெசோ மாநாட்டைப் போலவே இந்த மாநாட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் திட்டத்தையும் திமுக வைத்துள்ளதாம்.
ஆகஸ்ட் 5ம் தேதி விழுப்புரத்தில் டெசோ எனப்படும் தமிழ் ஈழ(புலி) ஆதரவாளர்கள் மாநாட்டை திமுக நடத்தவுள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வரவேற்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். உறுப்பினர்களாக பொன்முடி, தி.க. பொதுச் செயலாளர் கலி பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், திமுக பிரமுகர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஹசன் முகம்மது ஜின்னா ஆகியோர் உள்ளனர்.
மாநாடு குறித்து வரவேற்பு்க் குழு உறுப்பினர்களில் ஒருவர்க கூறுகையில், கடைசியாக 1986ம் ஆண்டு மதுரையில் டெசோ மாநாடு நடைபெற்றது. அதேபோல இந்த மாநாடும் அமையும். தேசியத் தலைவர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மனித உரிமை ஆர்வலர்களையும், தலைவர்களையும் இந்த மாநாட்டுக்கு அழைத்திருக்கிறோம்.
தமிழகத்தில் பல அமைப்புகள் தனித் தமிழ் ஈழத்திற்காக குரல் கொடுத்து வந்தாலும், திமுக போன்ற மிகப் பெரிய இயக்கத்தால் மட்டுமே தேவையான ஆதரவைத் திரட்ட முடியும். விளைவை ஏற்படுத்த முடியும்.
ஈழப் போரின் கடைசிக்கட்டத்தின்போது திமுக மீது பெருமளவில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது தனி(புலி) ஈழம் அமைவது தொடர்பான முயற்சிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான ஆதரவைப் பெற்றுத் தர திமுகவால் மட்டுமே முடியும் என்றார்.
No comments:
Post a Comment