Saturday, June, 16, 2012சென்னை::திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3-ம் தேதி 89-வது பிறந்தநாள். அப்போது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை 10.45 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வந்தார். அங்கு கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதிக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த ரஜினியிடம், சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்தேன். நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை’ என்றார்.
No comments:
Post a Comment