Saturday, June, 16, 2012இலங்கை::புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவரின் உத்தரவின் பேரில், குண்டுகளை வெடிக்க வைக்கவும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்கள் குறித்து புலனாய்வு தகவல்களை திரட்டியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆயுதப்பயிற்சிகளை பெற்றிருந்த ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை விதித்த நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன, இதற்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிய வர்த்தகருக்கும், மற்றுமொரு நபருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த 35 வயதான கதிரமலை சந்திரவேல் என்பவருக்கே 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீர்கொழும்பு முன்னகரை சிறிவர்தன வீதியை சேர்ந்த வர்த்தகரான 44 வயதான சுந்தரலிங்கம் இளஞ்செழியன், களுவாஞ்சிகுடி பெரிய போரதீவை சேர்ந்த 57 வயதான தம்பிராச சிவலிங்கம் ஆகியோருக்கே ஒத்தவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு கடூழியச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 39 திகதி முதல் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலபகுதியில், நீர்கொழும்பில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்கள் குறித்த தகவல்களை புலிகளுக்கு அறிவிக்கவும் உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்கள் 4 வருடங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment