Saturday, June, 16, 2012இலங்கை::புலிகள் மற்றும் ஆதரவு அமைப்புக்கள் தொடர்பில்விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என இலங்கை அரசாங்கம், ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் புலிகளும், ஆதரவுஅமைப்புக்களும் தாடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐரோப்பியஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் தலைவர் ஹர்மன் வான் ரொம்புவை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஐரோப்பா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் ரவினாத ஆரியசிங்க விளக்கமளித்துள்ளார்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், முன்னாள் புலி போராளிகளுக்குபுனர்வாழ்வு அளித்தல், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்கள்போன்றன குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும்ஒத்துழைப்புக்களுக்கு நன்றி பாராட்டுவதாக ரவினாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment