Monday, June, 18, 2012இலங்கை::முல்லைத்தீவு, மூதூர் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் இருந்து புலிகளின் வெடிப்பொருட்கள் சிலவற்றை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.
ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயிரத்து 16 ரவைகள் முல்லைத்தீவு செல்வபுரம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கி ரவைகளை குறித்த பகுதியில் வைத்திருந்த சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை மூதூரிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து 600 மில்லி மீற்றர் ரக மோட்டார் ஷெல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று இதை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்கரைப்பற்றில் தனியாருக்கு சொந்தமான காணியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் வயல் ஒன்றின் கால்வாயில் இருந்து கண்டெடுத்த கைக்குண்டை காணியில் விட்டுச் சென்றமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment